2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அகல கால் வைக்க விரும்பாத சமந்தா...

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 19 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


அதர்வாவுக்கு ஜோடியாக 'பாணா காத்தாடி' திரைப்படத்தில் நடித்தவர் சமந்தா. அதையடுத்து 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தவர் பின்னர் தெலுங்கில் பிஸியான நடிகையாகிவிட்டார்.

அங்குள்ள முன்னணி நடிகர்களுடன் அவர் ஜோடி போட்டு வந்த நேரம்தான், மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ போன்ற திரைப்படங்களுக்கு ஒப்பந்தமானார். ஆனால் தோல் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை காரணமாக அந்த திரைப்படங்களில் இருந்து வெளியேறினார் சமந்தா.

இருப்பினும் கௌதம் மேனனின் 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படத்தில் நடித்து, தான் தவறவிட்ட இடத்தை பிடித்துவிட்டார். இந்நிலையில் தெலுங்கில் சமந்தா நடித்த எட்டோ வெள்ளிப்போயிந்தி மனச என்ற திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆனபோது அதில் நடிக்க அவருக்கு அழைப்பு விடுத்தபோது மறுத்து விட்டார் சமந்தா.

காரணம், 'அகல கால் வைத்தால் எந்த மொழியிலும் பெரிய இடத்தை பிடிக்க முடியாது. அதனால் தென்னிந்திய சினிமா மட்டுமே போதுமென்று நினைக்கிறேன். அதுவும் தமிழ், தெலுங்கு, மலையாளமெல்லாம் எனக்கு தெரிந்த மொழிகள்.

அதனால் தெரிந்த மொழியில் புரிந்து நடிப்பதையே விரும்புகிறேன். அப்படி நடித்து தென்னிந்திய சினிமாவில் நம்பர்வன் இடத்தை அந்தஸ்தை எட்ட வேண்டும் என்பதே எனது எதிர்கால திட்டம்' என்கிறார் சமந்தா.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X