2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தினேஷ்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


மணிரத்னம் இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் திரைப்படம் 'கடல்'. இந்த திரைப்படத்ததை பொறுத்தவரைக்கும் இசைப்பபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் புதுவிதமான இசைநுட்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துகின்ற அதேவேளை இலங்கையை சேர்ந்த தினேஷ் கனகரத்னத்தையும் அறிமுகப்படுத்துவது முழு இலங்கைக்குமே பெருமை.

கடந்த காலங்களில் தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி மூலம் ஆத்திசூடி பாடல் மூலம் தினேஷ் அறிமுகமாயிருந்தாலும் தற்போது இசைப்புயலுக்கு பாடியிருப்பது பெருமையான விடயம் என தினேஷ் சந்தோசப்படுகிறார்.

கடல் திரைப்படத்தில் “மகுடி மகுடி...” என்ற பாடலை எழுதி பாடியிருப்பவர் தினேஷ் கனகரத்னம். அது மாத்திரமின்றி இலங்கையில் அண்மையில் வெளிவந்த ஏ.டிகே அல்பத்துக்கும் சொந்தக்காரர் என்ற பெருமை தினேசையே சாரும். எதிர்காலத்தில் சர்வதேச மற்றும் உள்ளூர் இசைப் பெருவிழாக்களிலும் தினேஷ் பங்குபற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0

  • Sadikeen Thursday, 17 January 2013 02:29 PM

    வாழ்த்துக்கள் !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X