2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

'விஸ்வரூபம்' வெளியீட்டில் மாற்றம்...

Menaka Mookandi   / 2013 ஜனவரி 10 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


'விஸ்வரூபம்' திரைப்படம் எதிர்வரும் 25ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று  உலகநாயகன் கமல்ஹாஸன் தகவல் வெளியிட்டுள்ளார்.

டீ.டி.எச். தொழில்நுட்பத்தில் இன்றைய தினம் இந்த திரைப்படம் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த கமல்ஹாஸன், இன்று தனது திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

டீ.டி.எச்.சில் இத்திரைப்படம் வெளியிடப்படும் திகதி குறித்து கருத்து எதுவும் வெளியிடாத அவர்  ஆனால், டீ.டி.எச் முயற்சிக்கு துணை நின்ற திரையுலக சகோதரர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து கமல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி 25ஆம் திகதி திரையரங்குகளுக்குக் குறையாமல் தமிழகமெங்கும் திரையிடப்பட இருக்கிறது.

என் தொலைநோக்கைப் புரிந்துகொண்டு டீ.டி.எச் எனும் புதிய முயற்சிக்கு துணை நிற்கத் தயாரான என் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர் சகோதரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். தனி மனிதனை மதித்து ஒருங்கிணைந்த அனைவருக்கும் நன்றி' என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .