2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ரவி, ஜீவாவுக்கு 'தூக்கு தண்டனை'

Menaka Mookandi   / 2013 ஜனவரி 15 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

Save
'பேராண்மை' திரைப்படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், தனது அடுத்த படத்துக்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார். இரண்டு பெரிய கதாநாயகர்களை வைத்து எடுக்கப்படவுள்ள தனது புதிய திரைப்படத்துக்கான படப்பிடிப்புக்களை மார்ச் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளாராம் ஜனநாதன்.
 
தனது 'பேராண்மை' நாயகன் ஜெயம் ரவியை தனது புதிய திரைப்படத்துக்கான இரு கதாநாயகர்களில் ஒருவராக தேர்வு செய்துள்ளார். அடுத்த கதாநாயகன் தேர்வில் இடம்பெற்றுள்ளவர் ஜீவா என தெரிவிக்கப்படுகின்றது. ஆகமொத்தத்தில், ரவியும் ஜீவாவும் இணையும் திரைப்படமாக ஜனநாதனின் புதிய திரைப்படம் அமையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, இவர்களை வைத்து ஜனநாதன் எடுக்கப்போகும் திரைப்படத்தின் பெயர் தான் விசேடத்துவமானது என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'தூக்குத் தண்டனை' என்பதே அவர் தனது புதிய திரைப்படத்துக்கு வைத்துள்ள பெயராகும். தலைப்பைப் பார்த்தாலே திகலாக உள்ளது அல்லவா...?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X