2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'தல'யுடன் இணைய 'தளபதி' ரெடி...

Menaka Mookandi   / 2013 ஜனவரி 16 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


'நல்ல கதை அமைந்தால் அஜீத் குமாருடன் சேர்ந்து நடிக்க தான் தயார்' என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். கோலிவூட்டில் அஜீத் குமாரும், விஜயும் பெரிய நடிகர்கள். ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்த அவர்களும் சரி, அவர்களின் ரசிகர்களும் சரி தற்போது நண்பர்களாகிவிட்டார்கள். ஏதாவது விழாக்களில் அஜீத், விஜய் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளிவந்தால் அதைப் பார்த்து ரசிகர்கள் பூரித்துப் போவார்கள்.

புகைப்படத்திற்கே இவ்வளவு வரவேற்பு என்றால் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்தார்கள் என்றால் எப்படி இருக்கும் என்று இயக்குநர்கள் தரப்பு யோசிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் என்ன சொல்வார்கள் என்ற தயக்கம் இருந்து வந்த நிலையில், அதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார் விஜய்.

1995ஆம் ஆண்டு வெளியான 'ராஜாவின் பார்வையிலே' என்ற திரைப்படத்தில் அஜீத், விஜய் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அப்போது அவர்கள் இருவருமே வளர்ந்துவரும் நடிகர்களாக இருந்தனர். ஆனால் இன்று, தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X