2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முதல் 'பிரியாணி...'

Menaka Mookandi   / 2013 ஜனவரி 17 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிதாகத் தயாராகிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'பிரியாணி'.  கார்த்தி, ஹன்ஸிகா, பிரேம்ஜி அமரன், சினேகா, பிரசன்னா, மண்டி தாஹர் ஆகியோர் நடிக்கும் இத்திரைப்படத்தின் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் முதன்முறையாக இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

இப்புகைப்படங்களை படக்குழுவின் இணையத்தளத்தில் வெளியிட்டதன் பின்னரே, திரைப்படத்தின் விளம்பரத்துக்காக அவற்றை வழங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் 'பிரியாணி' திரைப்பட புகைப்படங்கள் உலா வருகின்றன.

யுவன்சங்கர் ராஜாவின் இசையில் தயாராகும் இந்தத் திரைப்படமே யுவனின் இசையில் வெளியாகும் 100ஆவது திரைப்படமும் ஆகும். வெங்கட் பிரபு இயக்கத்தில் நகைச்சுவை கலந்த ஒரு மசாலா திரைப்படமாக 'பிரியாணி' வெற்றிபெரும் என்று இயக்குநர் தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X