2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

'பிகினி'க்கு 'நோ' சொன்ன நயன்...

Menaka Mookandi   / 2013 ஜனவரி 21 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


இனி எந்த திரைப்படத்திலும் பிகினி காட்சியில் நடிக்கப் போவதில்லை என்று நடிகை நயன்தாரா அறிவித்துள்ளார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நயன்தாரா பிகினியில் நடிக்கிறார்.

இத்திரைப்படம் வெளியாகும்போது அவரது நடிப்பைவிட கவர்ச்சி தான் திரையில் அதிகமாகத் தெரியும் என்று கதை அடிபட்டது. இது குறித்து நயன்தாரா கருத்து தெரிவிக்கையில்,

'அஜீத் திரைப்படத்தில் மீண்டும் பிகினியில் வருகிறேன் என்ற செய்தியில் உண்மையில்லை. அந்த திரைப்படத்தில் நான் ஓவராக கவர்ச்சியில் வருவதாகக் கூறுவதும் பொய்.

அத்திரைப்படத்துக்கு பிகினி காட்சியே தேவையில்லை. இனி எந்த திரைப்படத்திலும் பிகினி காட்சியில் நடிக்க மாட்டேன்' என்று கூறியுள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .