2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஸ்ருதிக்கு வலைவீசும் விசால்...

Menaka Mookandi   / 2013 ஜனவரி 23 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


'சமர்' திரைப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியின் உச்சத்திலுள்ள நடிகர் விசால், சொந்தமாக திரைப்படமொன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கதையையும் கைவசம் வைத்துள்ள அவர், தனது சொந்த திரைப்படத்துக்கான கதாநாயகிக்கான தேடலையும் முடித்துக்கொண்டுள்ளார்.

இதற்காக உலக நாயகன் கமல்ஹாஸனின் மகள் ஸ்ருதி ஹாஸனுக்கு வலை வீசியுள்ளாராம் விசால். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,
'திரைப்படத்துரையில் நான் மிகவும் பிஸியாக உள்ளேன். எவ்வாறாயினும் சொந்தமாக திரைப்படமொன்றை இயக்கும் முயற்சியில் தீவிரமாகவே உள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனது சொந்த திரைப்படத்துக்கான கதை தயாராகவே உள்ளது. இந்த திரைப்படத்துக்கு உகந்த கதாநாயகி ஸ்ருதி ஹாஸன் எனவும் தீர்மானித்துவிட்டேன். அவருக்காகவே ஸ்க்ரிப்ட் எழுதியுள்ளேன். இருப்பினும் எனது யோசனை நிறைவேறுமா என்பது எனக்கு தெரியாது.

என்னுடைய அடுத்த திரைப்படம் 'மத கத ராஜா'. இத்திரைப்படமும் விரைவில் வெளியிடப்படவுள்ளது. அதற்கு பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளேன். அந்த திரைப்படத்தில் ஆர்யா, ஜீவா ஆகியோரும் என்னுடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இருப்பினும் அந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என்று தெரியாது. வெங்கட் பிரபு அது குறித்து விரைவில் அறிவிப்பார்' என்று விசால் குறிப்பிட்டுள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X