2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விழுந்தால் விதையாக எழுவேன்: கமல்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 30 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


'எனது திரைப்படத்தில் இந்திய இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களைக் கேலி செய்யும் படமே இல்லை. எனது படத்தின் களம் ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும்தான். இதில் எப்படி இந்திய முஸ்லீம்களை இழிவுபடுத்த முடியும்' என்று விஸ்வரூபம் திரைப்படத்தின் இயக்குநரும் கதாநாயகருமான உலக நாயகன் கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.

'தமிழகம் என்னை புறக்கணிக்கிறது. தனி மனிதனை வீழ்த்திப பார்க்கலாம் என்று தமிழகம் நினைத்துவிடக் கூடாது. நான் விழுந்தாலும் மீண்டும் விதையாக எழுவேன்' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது வீட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாஸசன் மிகவும் உருக்கமாக, கண்களில் நீர் மல்க தனது விஸ்வரூபம் திரைப்படம் குறித்தும், சர்ச்சை குறித்தும், நீதிமன்ற வழக்கு குறித்தும் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் அங்கு மேலும் கூறியுள்ளதாவது,

'விஸ்வரூபம் தொடர்பாக பல்வேறு பேச்சுக்கள் உலவுகின்றன. அதுகுறித்து எனக்குத் தெரியாது. அவற்றை நான் நம்பவும் இல்லை. தாமதப்படுத்தப்பட்ட நீதியும், தடுக்கப்பட்ட நீதியும் ஒன்றே என்று ஆங்கிலத்தில் பழமொழி உள்ளது. எனக்கு தாமதமான நீதியே கிடைத்துள்ளது.

இருப்பினும் நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. இன்று எனக்கு சாதகமாக தீர்ப்பு வராமல் போனால் இப்போது நான் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இந்த வீடு எனக்கு இல்லை. இதை நான் விற்க வேண்டும். இங்கு எத்தனையோ பிரஸ்மீட் வைத்துள்ளேன், நடனமாடியுள்ளேன், ஓடியாடியுள்ளேன்.

ஆனால் இதை இழக்கவும் இப்போது தயாராகி விட்டேன். அதனால்தான் கடைசி முறையாக இந்த வீட்டில் ஒரு பிரஸ் மீட் வைக்க விரும்பி உங்களை அழைத்தேன். என்னடா சிரித்துக் கொண்டே சொல்கிறானே என்று பார்ககிறீர்களா..? என் வீடே அப்படித்தான், குடும்பமே அப்படித்தான். பணம் பெரிதல்ல. நீதிபதி சொன்னது போல தனி நபரின் சொத்து முக்கியமா, நாடு முக்கியமா என்று. நான் அதை ஏற்கிறேன்.

நாட்டுக்காக, எனது அத்தனை சொத்துக்களையும் இழக்க நான் தயார். தமிழகம் என்னைப் புறக்கணிக்கிறது. தனி மனிதனை வீழ்த்திப் பார்க்கலாம் என்று தமிழகம் நினைத்து விடக்கூடாது. நான் விழுந்தாலும் மீண்டும் விதையாக எழுவேன். மீண்டும் மீண்டும் எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும், காடாகும். ஆனால் விதை நான் போட்டது. எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது.

மதச் சார்பற்ற மாநிலமாக எனது தமிழகம் இருக்க முடியாத பட்சத்தில், மதச் சார்பற்ற இன்னொரு மாநிலத்தை இந்தியாவில் நான் தேடி அங்கு போய் குடியேறுவேன். ஒருவேளை இந்தியாவில் எங்குமே இடம் இல்லை என்றால் ஏதாவது ஒரு நாட்டுக்குப் போய் குடியேறுவேன். எனது திரைப்படத்தில் இந்திய இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களைக் கேலி செய்யும் படமே இல்லை. எனது படத்தின் களம் ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும்தான். இதில் எப்படி இந்திய முஸ்லீம்களை இழிவுபடுத்த முடியும்.

எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் இஸ்லாமியர்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள். கேரளாவில் மலபாரிர், ஹைதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்காக எனது அத்தனை சொத்துக்களையும் இழந்திருக்கிறேன். இன்னும் எனக்கு நஷ்டம் ஏற்படுமானால் மீதமுள்ள சொத்துக்களையும் நான் இழக்க நேரிடும்.

எனக்கு மதம் இல்லை, குலம் இல்லை, மனிதம் மட்டுமே எனக்கு முக்கியம். நாட்டின் முக்கியம் எனக்கு முக்கியம். இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • Nesan Wednesday, 30 January 2013 12:48 PM

    //* எனது திரைப்படத்தில் இந்திய இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவில்லை. *// இஸ்லாம் இந்தியாவிற்கு மட்டும் சொந்தமானது அல்ல. முழு உலகத்திற்கும் சொந்தமானது. அதை அவர் முதலில் புரிந்துகொள்ள‌ட்டும்.

    Reply : 0       0

    aj Wednesday, 30 January 2013 03:01 PM

    தடை உடை. படம் வெளியே வரும். மக்களும் பார்ப்பார்கள். உண்மையை யாருமே இலகுவாக மறைக்கவோ அழிக்கவோ முடியாது.
    நாங்கள் பொறுமையாக படம் வரும்வரை காத்திருப்போம்.

    Reply : 0       0

    nuhuman Thursday, 31 January 2013 08:49 AM

    இஸ்லாம் இந்தியாவிற்கு மட்டும் சொந்தமானது அல்ல. முழு உலகத்திற்கும் சொந்தமானது. அதை அவர் முதலில் புரிந்துகொள்ள‌ட்டும்.

    Reply : 0       0

    குமார் Friday, 01 February 2013 10:45 AM

    சில இஸ்லாமியர்களின் போக்கு விளங்கிக்கொள்ள முடியவில்லை. படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் இஸ்லாத்தையும் குரானில் உள்ள வசனங்களையும் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றே காட்டப்பட்டிருக்கிறது. இதில் மதத்தை இழிவுபடுத்த எதுவுமே இல்லை. மாறாக தலிபான்களை இழிவு படுத்துவதாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.

    Reply : 0       0

    MMM86 Friday, 01 February 2013 05:00 PM

    Mr.குமார் ஒரு விசயத்தை தெரிஞ்சிகங்க?? ஒரு விவசாயி, தன் சொந்த நிலம், தன் சொந்த உழைப்பு என்பதற்காக கஞ்சா பயிரிட சிறப்புரிமை கோர முடியாது. கலை (சினிமா) என்பதும் ஓர் உற்பத்திப் பொருளே. அது சமூகத்துடன் வினைபுரிவதால் விளைவுகள் உண்டாகும் என்னும்போது எப்படி தணிக்கையில் இருந்து விலக்கு அளிக்க முடியும்? "இதில் மதத்தை இழிவுபடுத்த எதுவுமே இல்லை. மாறாக தலிபான்களை இழிவு படுத்துவதாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்."

    இப்பொ சொல்லுங்க மேல நீங்க‌ சொன்ன கருத்து சரியானத?

    Reply : 0       0

    saf Saturday, 02 February 2013 09:06 AM

    சினிமா என்ற பெயரில் ஒரு சமயத்தையும், அதனை பின்பற்றும் மக்களையும், மன வேதனை படுத்துவது சறியா? அது எந்த சமயம் ஆனாலும் பிழைதானே. கொஞ்சம் நடுநிலையாக சிந்தித்து பாருங்களேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X