2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிங்கத்துக்கும் சோதனை...

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 02 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ள 'சிங்கம் 2' திரைப்படம் வெளியிட தயாராகிறது. ஹரி இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 
இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு சென்னை தணிக்கை குழு அதிகாரிக்கு முறைப்பாடு ஒன்றையும் கையளித்துள்ளார். அவ்வாறு அவர் கையளித்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'சூர்யா நடித்து ஹரி இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'சிங்கம் 2' திரைப்படத்தில் வில்லன்கள் கடற்கொள்ளையர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இத்திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் உள்ளன. இம்மாதிரியான காட்சிகளை முன் கூட்டி சுட்டிக்காட்டுவது சமூக பொறுப்புள்ளவர்களின் கடமை என்பதால் தணிக்கை குழு கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

இந்த திரைப்படத்தில் இத்தகு காட்சிகள் இடம்பெறாமல் தணிக்கை செய்து அனுமதி வழங்க வேண்டும். விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்படாமல் நிறுத்தப்பட்டதற்கு இஸ்லாமிய அமைப்புகள் மட்டும்மின்றி தணிக்கை குழுவும் காரணமாகும்.

சமூக பொறுப்பை தணிக்கை குழுவினர் சரியாக செய்யாததால் தான் தமிழகத்தில் அசாதாரண சூழல்கள் நிலவுகிறது. இதனை ஓரு படிப்பினையாக கொண்டு இனிவரும் திரைப்படங்களை கவனமாக தணிக்கை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.



You May Also Like

  Comments - 0

  • Niro Sunday, 03 February 2013 03:51 PM

    சூர்யா சூர்யா சூர்யா ....................

    Reply : 0       0

    mohamed hisam Monday, 04 March 2013 05:10 AM

    muslimkalukku ethiraha cinima padmo allathu naadahamo thayarippathai muttraha muslimkal sarfaha kandikkiraen

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X