2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பரிசோதனைகளுக்கு பாலியல் குற்றவாளிகளை பயன்படுத்தவும்: த்ரிஷா

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


'பரிசோதனைக் கூடங்களில் முயல், எலி போன்ற அப்பாவி விலங்குகளை பயன்படுத்துவதை விட பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்று நடிகை த்ரிஷா சிபாரிசு செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் புதிய மருந்து கண்டுபிடிப்புக்கான ஆய்வுக்கூடங்களில் நிறைய முயல், எலி போன்றவைகளை அடைத்து வைத்து அவற்றுக்கு மருந்தை செலுத்தி பரிசோதனை நடத்துகிறார்கள். இந்த முறையை தடைசெய்ய வேண்டும் என்றும் த்ரிஷா கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது,

'நான் பிராணிகள் பாதுகாப்பு அமைப்பில் இருக்கிறேன். பரிசோதனைக் கூடங்களில் பிராணிகள் பயன்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். சிறையில் நிறைய குற்றவாளிகள் உள்ளனர்.

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களும் சிறையில் இருக்கிறார்கள். பரிசோதனைக் கூடங்களில் அப்பாவி விலங்குகளுக்கு பதிலாக இந்த குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தி தண்டிக்கலாம்' என்று கூறியுள்ளார்.

நடிகை த'ரிஷா பிராணிகள் பாதுகாப்பு அமைப்புக்கு உதவியாக இருக்கிறார். வீதிகளில் திரியும் நாய்களை பிடித்து வளர்த்து தத்து கொடுக்கவும் செய்கிறார்.

இந்நிலையில், பரிசோதனைக் கூடங்களில் எலி, முயலை பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0

  • fmr Sunday, 10 February 2013 04:22 AM

    நம்ம நிலை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X