2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மீண்டும் ஐஸ்வர்யா...

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 11 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


குழந்தை பிறந்ததற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் முழு நேரமும் மகள் ஆரத்யாவை கவனிப்பதில் தீவிரம் காட்டி வந்த நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம்.

இதுபற்றி அவர் அளித்துள் பேட்டியில் குறிப்பிட்டுள்ளதாவது, 'மகள் ஆரத்யா தான் எனக்கு உலகம் என்றாகிவிட்டது. குழந்தையை நன்றாக வளர்ப்பதே என் முதல் வேலை. அதில்தான் என் முழு கவனத்தையும் ஈடுபடுத்துகிறேன். தற்போது மீண்டும் நடிக்க முடிவு செய்து உள்ளேன். சில இயக்குனர்களிடம் கதை கேட்டு இருக்கிறேன்.

அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடிப்பது போன்ற கதையம்சத்துடனும் நிறைய பேர் அணுகி கால்ஷீட் கேட்டுள்ளனர். எதையும் இதுவரை ஒத்துக்கவில்லை. எந்த கதையை தேர்வு செய்வது என்பதை குறித்து யோசிக்க எனக்கு நேரம் வேண்டும். சம்மதம் சொன்னதும் முழுமையாக படத்தில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்' என்று கூறியுள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X