2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஹன்சிகாவுக்கு இளம் சாதனையாளர் விருது...

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 26 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பிரபலமான நடிகை ஹன்சிகா மோத்வானி, 'இளம் சாதனையாளர் விருது'க்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 21 அனாதை குழந்தைகளைத் தத்தெடுத்து பராமரித்து வரும் அவருடைய அரியச் செயலுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

தன்னுடைய ஆறாவது வயதிலிருந்து ஹிந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை ஆரம்பித்த ஹன்சிகா, 2007ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து தமிழிலும் நடித்து வருகிறார்.

இவர் தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மும்பை குடிசை பகுதியில் இருந்து ஒரு ஏழைக் குழந்தையைத் தத்தெடுத்து அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான செலவுகளைச் செய்து வருகிறார்.

தன் நடிப்பு தொழிலுக்கு இடையில் அவர் செய்துவரும் இந்த அரியச் செயலால் இதுவரை 21 அனாதை குழந்தைகள் அவருடைய பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். இதுவன்றி சமூகசேவைகள் செய்வதற்காக அறக்கட்டளை ஒன்றை நிறுவவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இளம் வயதிலேயே சமூக நோக்கோடு அவர் செய்துவரும் இந்த அரியச் செயலையும் திரைப்பட சாதனைகளையும் பாராட்டி, பிரபல பெண்கள் இதழான துகுறு (தரளவ கழச றழஅநன்) ஹன்சிகாவை இளம் சாதனையாளர் விருதுக்குத் தெரிவு செய்துள்ளது.

எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள விழாவில் ஹன்ஷிகாவுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0

  • மனிதன் Monday, 04 March 2013 05:50 AM

    உன் மேனியைப் போல்
    உன் உள்ளமும் வெள்ளையானது!

    'பெத்'தெடுப்பது
    அரிகிவரும் இந்த வேளையில்
    தத்தெடுப்பதெற்கெல்லாம்
    நல்ல உள்ளம் வேண்டும் !


    மதம் கூறி மரணித்து போகும்
    மனிதம் இங்கு
    உன்னால் மட்டும்
    மனிதம் கூறி
    மனிதர் வளர்க்க முடிகிறது!

    தான் வாழ
    பிறர்முன் நடிக்கும் உலகில்,
    பிறர் வாழ
    நீ நடிப்பது
    புனிதம் தான் !

    வாழ்க வளமுடன் என்றும் !
    - கலைநிலா சாதிகீன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X