2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அனுஷ்காவுக்கு டும் டும் டும்...

Menaka Mookandi   / 2013 மார்ச் 02 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


'அருந்ததி' திரைப்படத்திற்கு பிறகு அதிரடி நடிகையாக உருவெடுத்தவர் அனுஷ்கா. ஏற்கனவே மாதவனுடன் நடித்த 'ரெண்டு' திரைப்படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு சென்ற அனுஷ்கா, அத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதையடுத்து பிரபல நடிகையானார்.

தென்னிந்திய அளவில் முக்கியமான நடிகை பட்டியலில் இடம் பிடித்தார். குறிப்பாக, முன்னணி நடிகர்களே அனுஷ்காவுடன் நடிக்க பயப்படும் அளவுக்கு டேக் ஆர்ட்டிஸ்டாகவும் திகழ்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது தமிழில் சிங்கம் - 2, இரண்டாம் உலகம் திரைப்படங்களை முடித்து விட்ட அனுஷ்கா, அடுத்தபடியாக தெலுங்கில் ராணி ருத்ரம்மா தேவி மற்றும் நான் ஈ இயக்குனர் ராஜமவுலி இயக்கும் திரைப்படம் என இரண்டு சரித்திர திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார்.

ஆக, ஒரே நேரத்தில் இரண்டு சரித்திர திரைப்படங்களில் நடிக்கிறார் அனுஷ்கா. இதே திரைப்படங்களில் முன்னணி நடிகர்களும் இருந்தாலும், அனுஷ்காவை சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளதாம். அதனால் சரித்திர காலத்து அரசியல்கள் போன்று வால் சண்டை, கத்தி சண்டை, குதிரை ஏற்றம் என்றெல்லாம் பயிற்சி எடுத்து இந்த திரைப்படங்களில் நடிக்கிறார் அனுஷ்கா.

ஆனால் இந்த நிலையில், தற்போது அனுஷ்கா 30 வயதை கடந்து விட்டதால், அவரது பெற்றோர்கள் அவருக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வந்தார்களாம். அப்படி பார்த்ததில் ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள முன்வந்ததையடுத்து, அனுஷ்காவுக்கு திருமணமும் முடிவாகிவிட்டதாம்.

என்றாலும், கைவசமுள்ள இரண்டு திரைப்படங்களையும் நடித்துக்கொடுத்த பிறகுதான் கல்யாணமாம். ஆனால் நடித்து வரும் திரைப்படங்கள் திரைக்கு வந்த பிறகுதான் திருமண விடயத்தை வெளியிட வேண்டும் என்று அனுஷ்கா தரப்பு ரகசியமாக வைத்திருந்த போதும், இப்போது எப்படியோ அந்த செய்தி லீக் அவுட்டாகி விட்டது. அதனால் இந்த உண்மை செய்தியை ஒத்துக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார் அனுஷ்கா.




You May Also Like

  Comments - 0

  • fahim Tuesday, 02 July 2013 12:56 PM

    இது ஒரு நல்ல முடிவு தான்..!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X