2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாற்றம் கோருகிறார் த்ரிஷா...

Menaka Mookandi   / 2013 மார்ச் 08 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


திரையுலக வாழ்க்கையில் 10 வருடங்களைக் கடந்துவிட்ட நடிகை த்ரிஷா தற்போது பல விருதுகளையும் பெற்றுவருகிறார். கதாநாயகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றியும் பெற்றுவரும் த்ரிஷாவிற்கு அண்மையில் தான் 'ஜே.எப்.டபிள்யூ. பெண் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் த்ரிஷா, ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் 'சென்னை எனக்கு பாதுகாப்பான மிகவும் நெருக்கமான இடம். ஆனால்  தினமும் பெண் குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்கள், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் என பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன' என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

'அண்மைக் காலமாக பாலியல் பலாத்காரம் அதிகம் பெருகிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த சட்ட திட்டங்கள் மாற வேண்டும். மாற்றம் என்றால் சிறு திருத்தங்கள் அல்ல. அடி முதல் நுனி வரை எல்லாமே மாற்றியமைக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான அநீதிகள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்'  என்று கூறியுள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X