2025 மே 19, திங்கட்கிழமை

கமலுக்கு ரஜினி அட்வைஸ்...

Menaka Mookandi   / 2013 மார்ச் 09 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

'விஸ்வரூபம்' திரைப்படத்தில் முதலீட்டுக்கு மேல் கிடைத்த இலாபத்தை வைத்து சொத்துகளை மீட்டு, அவற்றை பிள்ளைகளின் பெயர்களில் எழுதி வையுங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது நண்பர் கமல்ஹாஸனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

'விஸ்வரூபம' திரைப்படம் வெளியாகி, நான்கு வாரங்கள் முடிந்துள்ளன. கிட்டத்தட்ட அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் திரைப்படம் தூக்கப்பட்டுவிட்டாலும், அந்த திரைப்படத்துக்காக ஏற்படுத்தப்பட்ட பரபரப்பால், கணிசமாக கமலுக்கு இலாபம் கிடைத்துள்ளதாம்.
 
திரைப்படம் குறித்து பல சர்ச்சைகள், அதிருப்திகள் இருந்தாலும், பல நெருக்கடிகளைத் தாண்டி வசூல் ரீதியாக ஓரளவு திருப்தியான வருமானத்தைக் கமல் சம்பாதித்துவிட்டாராம். எனவே கமலுக்கு வாழ்த்து சொல்ல, தனக்கு நெருங்கிய எழுத்தாளருடன் கமல் வீட்டுக்குச் சென்றாராம் ரஜினி.

கமலுக்கு வாழ்த்து சொன்னவர், 'கிடைச்சிருக்கிற பணத்தில் சொத்துகளை மீட்டு உங்கள் பிள்ளைகள் பேரில் எழுதி வையுங்க. இனிமேல் அடிக்கடி வீட்டை அடமானம் வைத்துவிட்டு படமெடுத்ததாக வெளியில் சொல்ல வேண்டாம். இது தேவையில்லாத ரிஸ்க். உங்களுக்கு தோதான தயாரிப்பாளர்களைப் பிடிச்சி உங்களுக்குப் பிடிச்ச கதையில் நடிங்க. இந்த நேரத்துல இதை சொல்லும் உரிமை எனக்கிருக்கு' என்றாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X