2025 மே 19, திங்கட்கிழமை

பெண்கள் தெய்வங்கள்: சினேகா

Menaka Mookandi   / 2013 மார்ச் 13 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


குடும்பப்பாங்கான முகத்தோற்றத்தாலும் நடிப்புத் திறனாலும் ரசிகர்களின் மகங்களைக் கொள்ளைக் கொண்டவர் நடிகை சினேகா. இந்திய திரையுலகில் புன்னகை இளவரசியாக வலம் வருபவர். தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் சினேகா, 2000ஆம் ஆண்டு 'இங்கே ஒரு நீலப்பக்சி' என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். 2001ஆம் ஆண்டு 'என்னவளே' திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

மகளிர் தினத்தையிட்டு சினேகா விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, 'பெண்களின் சுதந்திரத்துக்கு தடை இருந்ததாகக் தெரியவில்லை. நாம் எமக்கு கிடைக்கும் சுதந்திரத்தை எவ்வாறு தக்க வைத்துக்கொள்கிறோமோ அதைப் பொறுத்து தான் எல்லாம் அமையப்பெரும் என்பது எனது கருத்து. காரணம், சிலரது வீடுகளில் பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை.

காரணம் அவர்கள் அதனை தவறாகப் பயன்படுத்திக் கொள்வார்களோ என்ற பயம். சிலர் அதிகமாக சுதந்திரம் கொடுத்தாலும் அதனை தவறாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை. மேலும் சிலர், அதிகமாக சுதந்திரம் கொடுப்பதாலேயே தவறான வழிகளுக்குச் செல்வார்கள். எங்களைப் பொறுத்தவரையில், எங்களது பெற்றோர் எங்களுக்கு சரியான சுதந்திரத்தைக் கொடுத்து வளர்த்துள்ளார்கள். நாங்கள் டுபாயில் வளர்ந்தாலும் தமிழ் கலாசாரத்துடன் வளர்ந்துள்ளோம்.

எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிராக தவறுகள் இடம்பெற்றுக்கொண்டுதான் உள்ளன. டெல்லியில் நடைபெற்ற சம்பவம் மிகப்பெரியது. அது தவிற எல்லா இடங்களிலும் தவறுகள் இடம்பெற்றுக்கொண்டுதான் உள்ளன. சரியான சட்டமுறைகள் கொண்டுவரப்படுமேயானால் இவ்வாறான தவறுகள் குறைய வாய்ப்புண்டு.

கிசு கிசு என்பது எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தும் விடயமாகும். சினிமா துறையைப் பொறுத்தவரையில் அது ஒரு சாதாரண விடயமாகிவிட்டது. குறிப்பாக நடிகைகள் குறித்து கிசு கிசுக்களை எழுதுவதால் 10 பத்திரிகைகளை அதிகமாக விற்க முடியும் என்று நினைக்கிறார்கள். அவர்களும் பெண்கள், அவர்களுக்கும் குடும்பம் என்று உண்டு என்று ஒருபோதும் நினைப்பதில்லை. எங்களைப் பற்றி எழுதுவதால் எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அது பாதிக்கும் என்று எவரும் சிந்திப்பதில்லை.

என்னுடைய சகோதரியும், அம்மாவும் தான் என்னுடைய மிக நெருங்கிய தோழிகள். சிறு வயதில் நான் ஏன் பெண்ணாக பிறந்தேன் என்று நினைத்ததுண்டு. குறிப்பிட்ட ஒரு வயதை வந்தவுடன் என் அம்மா, அக்காவைப் பார்த்து நான் பெண்ணாகப் பிறந்ததையிட்டு மிகவும் சந்தோஷப்பட்டுள்ளேன். பெண்கள் கடவுளாக மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று எல்லா தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார் சினேகா.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X