2025 மே 19, திங்கட்கிழமை

தேவதாசியாக கார்த்திகா...

Menaka Mookandi   / 2013 மார்ச் 17 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


மலையாளத்தில் உருவான 'மகர மஞ்சு' திரைப்படம் தமிழில் 'அப்சரஸ்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகை ராதாவின்  மகள் கார்த்திகா மிகவும் அழகாக காட்சியளித்துள்ளார். 'கோ' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் கார்த்திகா.
 
அத்திரைப்படம் ஓஹோவென ஓடியதால், ஹிட் நாயகிகள் வரிசையில் சேர்ந்தார். தற்போது பார்த்துப் பார்த்துப் படங்களைத் தெரிவு செய்து நடித்து வருகிறார்.  தனது தாயாரை அறிமுகப்படுத்தி மெருகேற்றி வளர வைத்த பாரதிராஜாவின் கையால் தற்போது குட்டுப்பட்டு அன்னக்கொடி திரைப்படத்தில் அசத்தியுள்ளார்.

கார்த்திகா தனது தாய் மொழியான மலையாளத்தில் நடித்த திரைப்படம்தான் 'மகர மஞ்சு'. இதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இது ராஜா ரவிவர்மாவின் கதையாகும். ரவிவர்மா வேடத்தில்தான் சந்தோஷ் சிவன் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை தற்போது தமிழில் டப் செய்து 'அப்சரஸ்' என்ற பெயரில் வெளியிடுகின்றனர். தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்திகா. அந்த கதாபார்த்திரத்துக்காக நிறைய ஸ்டடி செய்தாராம். அம்மாவும் நிறைய டிப்ஸ் கொடுத்தாராம். விளைவு - நிஜமான தேவதாசி போலவே திரைப்படத்தில் காட்சி தருகிறாராம் கார்த்திகா.

கார்த்திகா மட்டுமல்ல. பூர்ணா, நித்யா மேனன், மல்லிகா கபூர் ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்களாம். இவர்கள் அனைவரையும் இத்திரைப்படத்தில் கவர்ச்சியாகவும், அழகாகவும் காட்டியுள்ளாராம் இயக்குநர் லெனின் ராஜேந்திரன்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X