2025 மே 19, திங்கட்கிழமை

சில்க் ஆகிறார் சானா கான்...

Menaka Mookandi   / 2013 மார்ச் 26 , மு.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


'சிலம்பாட்டம்' திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகில்  அறிமுகமானவர் சானா கான். மும்பையைச் சேர்ந்த இவர், இதுவரையில் 5 மொழிகளில் 14 திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சானா கான், சில்க் ஸ்மிதாவாக நடித்துள்ள, 'கிளைமாக்ஸ்' மலையாள திரைப்படம், 'நடிகையின் டைரி' என்ற பெயரில் தமிழிலும் வெளியாகவுள்ளது.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு, ஏற்கனவே இந்தியில் 'தி டர்டி பிக்சர்' என்ற பெயரில் வெளியானது. அதில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவர் வென்றார்.

இதையடுத்து மலையாளத்திலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை 'கிளைமாக்ஸ்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர். இதில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் சானா கான் நடித்துள்ளார். இத்திரைப்படம் 'நடிகையின் டைரி' என்ற பெயரில் தமிழிலும் வெளியாகவுள்ளது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X