2025 மே 19, திங்கட்கிழமை

திருமணத்துக்கு அவசரமில்லை: சமந்தா

Menaka Mookandi   / 2013 மார்ச் 30 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருமணம் செய்துகொள்ள நான் அவசரப்படவில்லை. நான் நடிப்பில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார் நடிகை சமந்தா. நடிகர் சித்தார்த்துக்கும் சமந்தாவுக்கும் காதல். விரைவில் திருமணம் என தினசரி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

அண்மையில் காளகஸ்தி கோவிலுக்கு சமந்தாவும் சித்தார்த்தும் குடும்பத்தினரோடு சென்று ஜோடியாக ராகு, கேது பூஜை செய்ததால் இந்த செய்தி உறுதியாகியது. இந்த நிலையில் இந்த செய்திகள் பற்றி சித்தார்த் கருத்து தெரிவிக்கையில், 'திருமணத்துக்கு நான் தயாராகிவிட்டேன். குடும்பம், குழந்தை என வாழும் ஆசை வந்து விட்டது' என்றார்.

இதனால் திருமணத்துக்கு இருவருமே தயாராவதாக எழுத ஆரம்பித்தனர். ஆனால் இப்போது சமந்தா திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன் என்கிறார். அவர் கூறுகையில், 'எல்லோரும் எழுதுவதற்காக நான் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள முடியாது. நடிப்பில் நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது' என்றார்.




You May Also Like

  Comments - 0

  • riswan Sunday, 31 March 2013 04:16 AM

    சமந்தா எங்கள் வீட்டாருக்கு உங்களை மருமகளாக எடுப்பதற்கு மிகவும் ஆர்வமாகவுள்ளார்கள். நீங்கள் கூறும் பதிலில்தான் என் எதிர்காலமே உள்ளது.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X