2025 மே 19, திங்கட்கிழமை

திரைப்பட வாய்ப்புக்காக செக்ஸில் உடன்பாடு இல்லை: சனா கான்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 07 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


திரைப்பட வாய்ப்புக்காக யாருடனும் செக்ஸ் உடன்பாடு வைத்துக்கொள்ள மாட்டேன்' என்று நடிகை சனா கான் தெரிவித்துள்ளார். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 'நடிகையின் டைரி' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சில்க்காக சனா கான் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. அதன் பிறகு சனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு,

'சில்க் ஸ்மிதாவாக நடிக்க ஒப்புக் கொண்டவுடன் இன்டர்நெட்டில் அவர் நடித்த திரைப்படங்களை பார்த்தேன். அவருடைய நடை, உடை, பாவனைகளை பார்த்து தெரிந்து கொண்டேன்.

சில்க் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்கிறார்கள். சிலர் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், சிலர் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறுகின்றனர். எது எவ்வாறெனினும் சில்க்கின் மரணம் திரையுலகிற்கு ஏற்பட்ட பெரிய இழப்பு ஆகும்.

நான் தைரியமானவள். சொந்த காலில் நிற்க எனக்கு தெரியும். எந்த ஆணாலும் என்னை விரக்தி அடைய வைக்க முடியாது. என்னால் தான் ஆண்கள் பாதிக்கப்படுவார்கள். ஆண்களால் நான் பாதிக்கப்பட மாட்டேன்.

செக்ஸ் உடன்பாடு வைத்தால் தான் திரைப்பட வாய்ப்புகள் பெற முடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது அவரவர் தனிப்பட்ட எண்ணம். எனக்கு அது நடக்கவில்லை. நான் உறுதியானவள். எந்த சூழலிலும் யாருடனும் சமரசம் செய்ய மாட்டேன்.

சில்க் ஸ்மிதாவின் ஆவி என்னை மிரட்டாது. மாறாக என் கதாபாத்திரத்தில் நன்றாக நடிக்கிறாய் என்று பாராட்டும். என் கதாபாத்திரத்தில் நீ நடிப்பதற்காக பெருமைப்படுகிறேன் என்று அவரது ஆவி கூறும்' என சனா கான் தெரிவித்துள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X