2025 மே 19, திங்கட்கிழமை

துருவ நட்சத்திரமாக மின்னவுள்ள சூர்யா

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 17 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


'சிங்கம் 2' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிந்ததும், அடுத்தடுத்து கௌதம் மேனன் மற்றும் லிங்குசாமி ஆகியோரின் இயக்கங்களில் நடிக்கவுள்ளார் நடிகர் சூர்யா. இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்து இரண்டு புதுத் திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இதுகுறித்து சூர்யா கூறுகையில், 'கௌவுதம் வாசுதேவ மேனன் இயக்கும் புதுத் திரைப்படத்தில் அடுத்து நடிக்க உள்ளேன். இத்திரைப்படத்தை போட்டோன் கதாஸ் தயாரிக்கிறது. ஜுன் மாதம் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும். அத்துடன் லிங்குசாமி இயக்கும் திரைப்படமொன்றிலும் நடிக்க உள்ளேன். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. ஓகஸ்ட் மாதமளவில் இதன் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படத்துக்கு 'துருவ நட்சத்திரம்' என்ற பெயர் வைக்க பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இரு திரைப்படங்களுக்கும் கதாநாயகிகள் உள்ளிட்ட நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. இதற்கிடையே 'சிங்கம் 2' க்ளைமாக்ஸ் படப்பிடிப்புக்காக தென்னாப்பிரிக்காவுக்கு செல்லவுள்ளார் சூர்யா.

இதேவேளை, 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கை கோர்க்கிறார் கௌதம் மேனன். பல சர்ச்சைகளில் சிக்கினாலும் கௌதம் மேனனின் புதுத் திரைப்பட அறிவிப்பு வந்தாலே திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுவிடும். கௌதம் மேனன் இயக்கிய அண்மைய திரைப்படங்கள் மூன்று வரிசையாக காலை வாரிவிட்டன. இருப்பினும், அடுத்த திரைப்படம் குறித்து கௌதம் மேனன் அறிவித்ததுமே அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

கதை, திரைக்கதை அனைத்தையுமே சூர்யா முடிவு செய்துவிட்டாராம். இந்த திரைப்படத்தில் மீண்டும் ரஹ்மானுடன் இணைகிறார் கௌதம் மேனன். இதுகுறித்து அவர் கூறுகையில், 'அனைத்தையும் சூர்யா முடிவு செய்துவிட்டார். திரைப்படத்தின் தலைப்புக்கும் ஓகே சொல்லிவிட்டார். இது ஒரு அக்ஷன் திரைப்படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்' என்றார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X