2025 மே 19, திங்கட்கிழமை

நயன் - ஆர்யா டும் டும் டும்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 18 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக பரபரப்புத் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்தியாவின் பூனே நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நயன்தாரா – ஆர்யா ஜோடி சேர்ந்து நடிக்கும் 'ராஜா ராணி' திரைப்படத்தின் ஒரு முக்கிய காட்சிக்காகவே இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது. அட்லீ குமார் இயக்கும் இந்த திரைப்படத்தில் நயனும் ஆர்யாவும் ஜோடியாக நடிக்கின்றனர். நயன்தாராவின் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நயன்தாராவும் ஆர்யாவும் திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சியை பூனேயில் உள்ள தேவாலயத்தில் எடுக்க முடிவு செய்த இயக்குநர், அதற்காக பூனே சென்ட் மேரீஸ் தேவாலயத்தில் அனுமதி பெற்றார். நாட்டில் உள்ள எங்கலிகன் தேவாலயங்களில் மிகப் பழமையானது இதுதான். ஒரு தேவாலயத்தில் நடக்கும் திருமணத்தில் என்னென்ன சடங்குகள் முறைப்படி நடக்குமோ, அதில் ஒன்றுவிடாமல் இருவருக்கும் நடத்தப்பட்டது.

ஆர்யா கோட் சூட் அணிந்திருந்தார். நயன்தாரா பாரம்பரிய வெள்ளை சட்டை அணிந்து வந்தார். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் இந்த திருமணக் காட்சி படமாக்கப்பட்டது. ஆனால் அது சினிமாக்காட்சி போலவே தெரியவில்லையாம்.  நிஜ திருமணம் போலவே இருந்ததாம்.




You May Also Like

  Comments - 0

  • dooringtalkies Thursday, 25 April 2013 10:59 AM

    திரைத்துறையில இதெல்லாம் சகஜம் தானே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X