2025 மே 19, திங்கட்கிழமை

அப்பாவுக்கு 'நோ' சொன்ன மகள்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 19 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை ஜூலை மாதத்துக்குள் முடித்து விட திட்டமிட்டுள்ள உலக நாயகன் கமல் ஹாஸன், 'பிட்டர் சொக்லேட்' என்ற திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும்படி, தன் மகள் ஸ்ருதியை கேட்டுக் கொண்டாராம்.

'உங்களுடன், ஒரு திரைப்படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. ஆனால், இப்போது உங்களுக்கு கால்ஷட் தரமுடியாத அளவுக்கு பிசியாக இருக்கிறேன் என்று, தன் இயலாமையை கூறிய ஸ்ருதி, 'பிட்டர் சாக்லெட்டுக்கு பின் நீங்கள் இயக்கும் படத்தில், கண்டிப்பாக நடிப்பேன் என, உறுதி அளித்துள்ளாராம்.

பிசியாக இருப்பது ஒரு பக்கம் சந்தோஷம் அளித்தாலும், அப்பா படத்தில் நடிக்க முடியாமல் போனது, தனக்கு வருத்தம் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார், ஸ்ருதி ஹாசன்.




You May Also Like

  Comments - 0

  • Baaba chandru Monday, 27 May 2013 09:22 AM

    சுத்த வேஷ்ட்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X