2025 மே 19, திங்கட்கிழமை

தனுஷுக்கான நயனின் பரிசு

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 21 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் தனுஷ் தயாரித்து நடிக்கவுள்ள 'எதிர்நீச்சல்' திரைப்படத்துக்காக சம்பளம் வாங்காமலேயே குத்துப் பாடலொன்றுக்காக நடனமாடியுள்ளாராம் நடிகை நயன்தாரா.

சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிக்கும் 'எதிர்நீச்சல்' திரைப்படத்தை தயாரித்து வருகிறார் தனுஷ். இந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட வேண்டும் என்று நயன்தாராவை கேட்டுள்ளாராம் தனுஷ்.

தனுஷின் இந்த வேண்டுகோளுக்கு நயனும் உடனே ஓ.கே. சொல்லிவிட்டாராம். அதற்கு காரணம் தனுஷ் தன் நண்பர் என்பது தானாம். 'யாரடி நீ மோகினி' திரைப்படத்தில் நடித்த போது தனுஷும் நயன்தாராவும் நல்ல நண்பர்களாகிவிட்டனராம். 

நட்புக்கு மரியாதை கொடுத்துதான் நயன்தாரா, 'எதிர்நீச்சல்' திரைப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளாராம். நண்பன் தயாரிக்கும் திரைப்படம் என்பதால் நயன்தாரா சம்பளமே வாங்காமல் குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0

  • IsMaTh iSmU Sunday, 19 May 2013 08:46 AM

    enne 1 paranthe manasu

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X