2025 மே 19, திங்கட்கிழமை

மிரள வைக்கும் சதா...

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 22 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் திரையுலகிற்கு 'ஜெயம்' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சதா. ஆதன் பின்னர் சங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் 'அந்நியன்' திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் திரையுலகில் பல வாய்ப்புக்களைப் பெற்று பிஸியாக இருந்தார்.
 
கடந்த சில காலமாக திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சதா, தற்போது தெலுங்கில் த்ரில்லர் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறாராம். அழகாக இருந்தாலும் வாய்ப்பு என்னவோ வர மாட்டேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டது சதாவுக்கு. இதையடுத்து அவர் கன்னடத்து பக்கம் போய் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் அவர் 'தச திரிகிந்தி' என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சதா, ரசிகர்களை பயமுறுத்தப் போகிறாராம். சிவாஜி என்பவருடன் நடிக்கும் சதா, ரசிகர்களை மிரள வைக்கப் போகிறாராம்.  இத்திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X