2025 மே 19, திங்கட்கிழமை

உடற்கட்டழகராக விக்ரம்

A.P.Mathan   / 2013 மே 20 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


கதாபாத்திரத்திற்கு ஏற்றமாதிரி தன்னை வருத்தி மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் விக்ரமுக்கு பெரும் இடமிருக்கிறது. மறுபடியும் இயக்குநர் ஷங்கருடன் இணைந்து “ஐ” திரைப்படத்தில் நடித்துவருகிறார் விக்ரம். வழமைபோல், ஷங்கரின் படங்களென்றாலே கதைகள் வெளியில் தெரிவதில்லை. ஆனாலும் அரசல் புரசலாக கதைகள் கசிவதுமுண்டு.
 
அந்தவகையில் இப்பொழுது வெளிவந்திருக்கும் புதிய கதை இதுதான். ஐ திரைப்படத்தில் விக்ரம் உடற்கட்டழகு கலைஞராக (பொடி பில்டர்) நடிக்கிறாராம். இதற்கான பயிற்சிகளை பெறுவதற்காக தற்சமயம் நியூசிலாந்தில் தங்கியிருப்பதாக கதைகள் அடிபடுகின்றன.
 
இத்திரைப்படத்தில் பிரதான வில்லனாக தமிழ்நாட்டின் தேசிய உடற்கட்டழகு சம்பியனான காமராஜ் நடிக்கிறார். ஆகையினால் அவருக்கு ஈடாக விக்ரமும் தனதுடலை மெருகேற்றுவதில் சிரமமின்றி உழைப்பதாக படப்பிடிப்பு குழுவினரிலிருந்து கசிந்திருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X