2025 மே 19, திங்கட்கிழமை

ரஜினியின் புதுமுகம்...!

Menaka Mookandi   / 2013 மே 23 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் தமிழ், இந்தி என பல திரையுலகைச் சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ள திரைப்படம் கோச்சடையான்.

ரிலீஸுக்கான கடைசி கட்டப் பணிகளில் இருக்கும் கோச்சடையான் திரைப்படத்தின் இந்தி, தெலுங்கு மொழிகளுக்கான டப்பிங் வேலைகள் நடபெற்று வருகின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி ஏ.ஆர்.ரஹ்மானின் வேண்டுகோளுக்கிணங்கி சொந்தக் குரலில் தமிழில் பாடல் பாடியிருக்கிறார்.

கோச்சடையான் திரைப்படத்தில். இந்த செய்தி தமிழ்த் திரையுலக ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பையும், கோச்சடையான் திரைப்படத்தின் பாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதே எதிர்பார்ப்பை இந்தி திரையுலகிலும் ஏற்படுத்தும் வகையில், ரஜினியை இந்தியிலும் பாட வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். வைரமுத்து தமிழில் எழுதிய பாடல் வரிகளை இஷாத் கமில் இந்தியில் மொழிப்பெயர்த்து கொடுக்க சமல் தான் இந்திப் பாடலை ரஜினி பாடியிருக்கிறார்.

திரைப்படத்தில் வரும் ரஜினியின் நம்பிக்கைகளையும், தத்துவங்களையும் குறிப்பிடும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் பாடலில் 'மனிதன் மண் மீது பேராசைக் கொள்கிறான். ஆனால் கடைசியில் மனிதனை மண் தனக்குள் இழுத்துக்கொள்கிறது' என்பது போன்ற பொருள்படும் வரிகள் இடம்பெற்றிருக்கிறதாம்.

இந்த பாடல் இந்தியில் ரஜினி பாடும் முதல் பாடல் என்றாலும், தமிழில் இதற்குமுன்பே இளையராஜாவின் வற்புறுத்தலின்பேரில் 'மன்னன்' திரைப்படத்தில் 'அடிக்குது குளிரு' என்ற பாடலை ரஜினி பாடியிருக்கிறார்.


You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO. Saturday, 25 May 2013 04:47 AM

    இதில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கல், காட்சிகள் இல்லைத்தானே... அப்போ தப்பித்துக்கொள்வார்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X