2025 மே 19, திங்கட்கிழமை

ஹீரோயிசம் வேண்டாம்: நயன்

Menaka Mookandi   / 2013 ஜூன் 02 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹீரோயிசம் உள்ள கதைகளில் இனி நயன்தாரா நடிக்க மாட்டாராம். நயன்தாராவை தங்கள் திரைப்படங்களில் நடிக்க வைக்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் அந்த திரைப்படங்கள் எல்லாம் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களாக உள்ளனவாம்.

திரைப்படத்தில் நயன்தாராவை வயதான நடிகையாக கருதி பிளாஷ்பேக் காட்சி இல்லை என்றால் ஏதாவது கதாபாத்திரத்தில் வந்து செல்வது போன்ற கதாபாத்திரத்தை தான் தருவதாக சொல்கிறார்களாம்.

ஹீரோக்களுக்கு வளர்ந்து வரும் இளம் நடிகைகளை ஜோடியாக்கிவிட்டு நயனுக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தை தருகிறார்களாம். அஜீத் நடித்துள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் கூட தப்ஸிக்கு தான் அதிக முக்கியத்துவம் என்று கூறப்படுகிறது.

ராஜா ராணி திரைப்படத்தில் கூட நஸ்ரியா நஸீம் தான் ஆர்யாவின் ஜோடியாம். அதனால் இனி ஹீரோயிசம் உள்ள திரைப்படங்களில் நடிப்பதில்லை என்று நயன் முடிவு செய்துள்ளாராம்.

கஹானி ரீமேக்கில் நடிக்கும் நயன் அது போன்று தனக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் தான் இனி நடிப்பாராம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X