2025 மே 19, திங்கட்கிழமை

நீ முன்னால போனால்...!

Menaka Mookandi   / 2013 ஜூன் 06 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


'நீ முன்னால போனால் நான் பின்னாடி வருவேன்' என்கிற மாதிரி, நடிகை சமந்தா எங்கு போனாலும் அவர் பின்னால் நடிகர் சித்தார்த் போகிறாராம். இது குறித்து செய்தியாளர்கள் தன்னிடம் கேள்விகள் கேட்கப்படுவதால் செம கடுப்பாக இருக்கிறாராம் நடிகர் சித்தார்த்.

நடிப்பதை விட கஷ்டமானது, இந்த செய்தியாளர்களை சமாளிப்பதுதான். அதிலும் ஏதாவது கிசுகிசுவில் மாட்டி விட்டால் போதும் பிய்த்து எடுத்து விடுவார்கள் நம்மவர்கள். அப்படித்தான் இப்போது சிக்கித் தவிக்கிறாராம் சித்தார்த்.

காளஹஸ்தி கோவிலுக்கு நடிகை சமந்தா மற்றும் தனது பெற்றோருடன் சேர்ந்து போனார். அதுகுறித்து இப்போது தொடர்ந்து அவரிடம் விலாவாவரியாக விசாரித்து வருகிறார்கள் நிருபர்கள். இதனால் கடுப்பாக இருக்கிறாராம் சித்தார்த்.

சில மாதங்களுக்கு முன்னால் சமந்தா, சித்தார்த், அவரோட அப்பா, அம்மா ஆகியோர் காளஹஸ்தி கோவிலுக்கு போனார்கள். போய் பரிகார பூஜை செய்தார்கள். இதையடுத்து சித்தார்த்தும், சமந்தாவும் காதலிப்பதாக செய்திகள் பரவின. இதை இருவரும் மறுக்கவும் இல்லை. ஆமாம் என்று சொல்லவும் இல்லை.

இந்த நிலையில் சித்தார்த்தை சந்திக்கும் செய்தியாளர்கள் வழக்கமான கேள்விகளைக் கேட்டு விட்டு கடைசியாக எப்போது சமந்தாவுடன் கல்யாணம் என்ற கேள்வியையும் முன் வைக்கிறார்களாம்.

இதனால் டென்ஷனாகி விடுகிறாராம் சித்தார்த். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அதேநேரம் சினிமா உலக பத்திரிகைகள் ஒரு திரைப்படத்தை பற்றி விமர்சிக்கலாம். நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க அவர்களுக்கு உரிமை கிடையாது என்றாராம்.

சொல்லப்போனால் ஒரு நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்துவதன் மூலம் அது எந்த வகையிலும் உலகத்துக்கு உதவப்போவதில்லை என்றும் டென்ஷனாக கூறுகிறார் சித்தார்த்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X