2025 மே 19, திங்கட்கிழமை

'நான் ரொம்ப பிஸி...!'

Menaka Mookandi   / 2013 ஜூன் 09 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக நாயகன் கமல் ஹாஸனின் புதல்வியும் நடிகையுமான ஸ்ருதி ஹாஸன், தனக்கு ஒரு நாளைக்கு 26 மணிநேரம் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். ஸ்ருதி ஹாஸன் தமிழ் திரைப்படங்களில் தற்போது நடிக்கவில்லை. மாறாக இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் ரொம்பவே பிஸியாக உள்ளாராம்.

அவர் தெலுங்கில் நடித்துள்ள 'பலுப்பு' திரைப்படத்தை எதிர்பார்த்துள்ளார். மேலும் 2 தெலுங்கு திரைப்படங்கள் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகின்றன. பிரபுதேவா இயக்கி வரும் இந்தி திரைப்படமான 'ராமைய்யா வஸ்தாவய்யா' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதனால் ஓய்வின்றி ஹைதரபாத்துக்கும், மும்பைக்குமாக ஓடி ஓடி நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்ருதி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 'என்னை பிசியாக வைத்திருக்கும் கடவுளுக்கு நன்றி. தயவு செய்து ஒரு நாளைக்கு 26 மணிநேரம் கொடுங்களேன்' என்று தெரிவித்துள்ளார்.




You May Also Like

  Comments - 0

  • Mohamed Monday, 10 June 2013 06:29 PM

    நாட்டில ஆயிரத்தி எட்டு (1008) பிரச்சினைகள் இருக்கு, அதுகள விட்டுப்போட்டு கமல் ஹாசன்ட மகள் வாழ்ந்தா என்ன? செத்தா என்ன...?

    Reply : 0       0

    Sevakan Wednesday, 12 June 2013 08:55 PM

    இல்ல சும்மாதான் கேக்கிறன்... இவங்களெல்லாம் வாழ்ந்து என்னத்த கிழிக்கப்போராங்க? கெட்ட கேட்டுக்கு ஒருநாளைக்கு 26 மணிநேரம் இருக்க வேண்டுமாம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X