2025 மே 19, திங்கட்கிழமை

அம்மாவாக ஆசைப்படும் சமந்தா...

Menaka Mookandi   / 2013 ஜூன் 16 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


வயது கூடிக்கொண்டே செல்வதால், தனக்கும் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை வந்து விட்டதாக தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா. தமிழில் 'பாணாக்காத்தாடி' மூலம் ரசிகர்களின் மனதில் 'நீதானே என் பொன் வசந்தம்' என சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் சமந்தா.

காதல், கல்யாணம் என சமந்தாவையும், சித்தார்த்தையும் சேர்த்து நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக கிசுகிசுக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தனக்கு குழந்தை ஆசை வந்து விட்டதாக ட்விட்டரில் கூறியிருக்கிறார் சமந்தா.

திருப்பதி ஏழுமலையான் புண்ணியத்தில் சமந்தாவும், சித்தார்த்தும் திருப்பதி சென்று குடும்பத்தோடு வழிபட்டது வெட்ட வெளிச்சமானது. அடுத்தது திருமணம் தான் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்க சித்தார்த், சில தினங்களுக்கு முன் 'பெற்றோர் பார்க்கும் பெண்ணையே மணமுடிப்பேன்' என பரபரப்பைக் கிளப்பினார்.

ஆனாலும், காதல் புறாக்கள் திரைப்பட விழாக்களில் ஜோடி போட்டு சுற்றுவது தொடரத்தான் செய்கிறது. கைவசம் உள்ள திரைப்படங்களை முடித்த பிறகு திருமண அறிவிப்பு வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமந்தாவுக்கு தெலுங்கில் 5 திரைப்படங்களும், தமிழிலும் ஒரு திரைப்படமும் கைவசம் உள்ளது.

இந்நிலையில், சமந்தா டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, 'படப்பிடிப்பில் ஒரு குழந்தையை பார்த்தேன். அதை தூக்கி கொஞ்சினேன். பிஞ்சு விரலால் அக்குழந்தை என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டது. அக்குழந்தையை விட்டு என்னால் விலக முடியவில்லை. எனக்கு வயது ஆகிவிட்டது தெரிகிறது. எனக்கும் தாய் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு உள்ளது' என கூறியுள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X