2025 மே 19, திங்கட்கிழமை

முதன்முறை அமலா...

Menaka Mookandi   / 2013 ஜூன் 21 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை அசினுக்குப் பிறகு முதல் முறையாக சொந்தக் குரலில் பேசிய நடிகை என்ற 'பெருமை'யைப் பெற்றுள்ளார் நடிகை அமலா பால். அமலா பாலுக்கு தமிழ் நன்கு தெரியும் என்றாலும், அவர் இதுவரை நடித்த திரைப்படங்களில் இரவல் குரல்தான்.

ஆனால் விஜய் நடிக்கும் 'தலைவா' திரைப்படத்தில் மட்டும் முதல் முறையாக தன் குரலிலேயே டப்பிங் பேசியுள்ளார். இதற்காக தொடர்ந்து நான்கு நாட்கள் இயக்குநர் விஜய்யிடம் தமிழ் ட்யூஷன் கற்றுக் கொண்டாராம் அமலா.

பின்னர் எதிர்ப்பார்த்ததை விட வேகமாகவே டப்பிங் பேசி முடித்திருக்கிறார். அசினுக்குப் பிறகு தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசும் ஒரே மலையாள நடிகை என்ற பெருமை அமலா பாலுக்குக் கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், 'அமலாவுக்கு நல்ல குரல். உச்சரிப்பில் மட்டும் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. இப்போது சரியாகிவிட்டது. என் ஹீரோயின்கள் அனைவரும் சொந்தக் குரலில் தமிழ் பேச வேண்டும் என்று விரும்புவேன். அனுஷ்காதான் இதில் மிஸ்ஸாகிவிட்டார்' என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X