2025 மே 19, திங்கட்கிழமை

கோடிகளில் தவழும் நயன், அனு...

Menaka Mookandi   / 2013 ஜூன் 23 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் சினிமாவிலே இதுவரை எந்த நடிகையும் பெறாத அளவு சம்பளத்தை பெற்று சினிமா வரலாற்றில் தங்களுக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள் நயன்தாராவும், அனுஷ்காவும்.

இருவரது மார்க்கெட்டும் உச்சத்தில் இருப்பதால், அதிக சம்பளத்தைக் கொடுத்து இவர்களைத் தங்களது திரைப்படத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் போட்டி போடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள். தற்போது, நயன்தாரா, அனுஷ்கா சம்பளம் ரூ. 2 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தளவு அதிக சம்பளத்தை இதுவரை தமிழிலும் சரி, தெலுங்கிலும் சரி வேறு எந்த நடிகைகளும் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் பேராதரவால், தங்களின் சம்பளத்தை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளனராம் இவர்கள்.

தெலுங்கில் நடித்துவரும் 'அனாமிகா' திரைப்படத்துக்காக இந்த சம்பளத்தைப் பெறுகிறார் நயன். இப்படம் இந்தியில் ஹிட்டான 'கஹானி' என்ற திரைப்படத்தின் ரீமேக். இந்தியில் இந்த கதாபாத்திரத்தை வித்யாபாலன் ஏற்றிருந்தார்.

கதைப்படி நயனுக்கு கர்ப்பிணி வேடம். கர்ப்பிணியாக நடிப்பதற்காகவே, இவ்வளவு பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார்களாம் திரைபடத் தயாரிப்பாளர்கள்.

தமிழில் அஜீத் ஜோடியாக ஒரு படத்திலும், ஆர்யா ஜோடியாக 'ராஜா ராணி' திரைப்படத்திலும் உதயநிதியுடன் 'இது கதிர்வேலன் காதலி' திரைப்படத்திலும் நடித்து வருகிரார். ஆனால், இப்படங்களுக்காக குறைந்த அளவே சம்பளம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனாமிகாவின் மூலம் சம்பளத்தை உயர்த்தியுள்ள நயன், இனி ஒப்பந்தமாகும் படங்களுக்கும் இதே அளவு ரூ 2 கோடியைச் சம்பளமாக கேட்க முடிவெடுத்துள்ளாராம்.

அனுஷ்கா 'ருத்ரமாதேவி' என்ற சரித்திர படத்தில் நடிப்பதற்கு அதிகச் சம்பளமான ரூ.2 கோடி பெற்றுள்ளார். இத்திரைப்படத்தில் அனுஷ்காவுக்கு மகாராணி வேடமாம். இப்படத்திற்காக வாள் சண்டையும் கற்றார் அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X