2025 மே 19, திங்கட்கிழமை

வறிய மாணவர்களுக்கு உதவும் கலைக் குடும்பம்...

Menaka Mookandi   / 2013 ஜூலை 01 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர்கள் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் உதவியால் 650 மாணவர்கள் உயர்கல்வி பெற்றுள்ளனர். தமிழ் சினிமா உலகைப் பொறுத்தவரை இது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2.5 இலட்சம் ரூபாவினை பரிசாக வழங்கினார்கள். ஏழை மாணவர்களுக்காக நடத்தப்படும் தாய் தமிழ் பள்ளிக்கு ஒரு இலட்சம் ரூபாவும் வாழை சமூக சேவை இயக்கத்துக்கு இரண்டு இலட்சம் ரூபாவும் வழங்கினர்.

விழாவில் சூர்யா பேசுகையில், 'கடந்த 34 வருடமாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வேறு உதவிகளைவிட கல்விக்கு செய்கின்ற உதவி ஒருவருக்கு கடைசி வரை நிலைத்திருக்கும்.

'அகரம் பவுண்டேசன்' அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறது. இந்த அமைப்பு சார்பில் 650க்கும் அதிகமான மாணவர்களின் கல்லூரி கனவை நனவாக்கி இருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை குழந்தைகளின் கல்விக்கு வழங்க வேண்டும்' என்றார்.

அதிக மதிப்பெண் பெறும் ஏழை ப்ளஸ் - டூ மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவி என்ற திட்டத்தை தனது 100ஆவது திரைப்படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி வெளியானபோது 1979-ல் தொடங்கினார் சிவகுமார். 30 ஆண்டுகள் தொடர்ந்து அந்த பணியைச் செய்து வந்தார் சிவகுமார்.

சூர்யாவும், கார்த்தியும் நடிகர்களாக கோலோச்ச ஆரம்பித்ததும் அந்தப் பொறுப்பை சூர்யா ஆரம்பித்த அகரம் பவுண்டேஷன் கையிலெடுத்துக் கொண்டது. சிறிய அளவிலிருந்த இந்த கல்வி உதவியை பெரிய அளவுக்குக் கொண்டு சென்றவர்கள் சூர்யாவும் கார்த்தியும்தான்.

'என்னைப் போல ஏழ்மை நிலையிலிருந்து கல்வியைத் தொடர முடியாமல் கஷ்டப்படும் மாணவர்களை ஊக்கப்படுத்த நான் சிறிய அளவில் உதவிகளைச் செய்தேன். என் பிள்ளைகள் சூர்யாவும் கார்த்தியும் அதை பெரிய அளவுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள்' என்று நடிகர் சிவகுமார் தெரிவித்தார்.







You May Also Like

  Comments - 0

  • haniffa latheef Monday, 01 July 2013 05:32 PM

    கல்வி கற்க வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.... கிரேட் சிவகுமார், சூர்யா, கார்த்திக்...!!!

    Reply : 0       0

    IBNU ABOO. Tuesday, 09 July 2013 02:55 PM

    நிஜத்திலும் நிழலிலும் யதார்த்தமான பெருதை படைத்த மனிதர்கள். இவர்களைப்போன்ற நடிகர்களின் திரைப்படங்களுக்கு புரண ஆதரவு வழங்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X