2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அட தமன்னாவா... ஓவர்!

Menaka Mookandi   / 2013 ஜூலை 09 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


நண்பன் திரைப்பட கதாநாயகி இலியானாவை பின்பற்றி பொலிவூட்டுக்கு சென்றுள்ளார் நடிகை தமன்னா. இந்நிலையில் இரண்டு இந்தித் திரைப்படங்கள் மற்றும் இரண்டு தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தமன்னா.

இருந்தாலும் இலியானாவைப் போன்று தன்னை பெரிய நடிகையாக்கிய தெலுங்கு திரைப்பட உலகை மறக்காத அவர் தொடர்ந்தும் தெலுங்கில் நிலைத்திருக்க விரும்புகிறாராம். ஆனால், அதற்காக அவர் கேட்கும் சம்பளத்துக்கோ கடுப்பாகிப் போயுள்ளனராம் தயாரிப்பாளர்கள். 

தெலுங்கு திரைப்படமொன்றில் நடிப்பதற்கு நடிகை தமன்னா ஒரு கோடி ரூபா சம்பளம் கேட்கிறார் என்று மூத்த தயாரிப்பாளர் ஒருவர் கடுப்பாகியுள்ளார். பொலிவூட்டுக்கு சென்றபிறகு தெலுங்கு திரைப்படங்களில் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று தயாரிப்பாளர்கள் முணுமுணுக்கின்றனர்.

ஏற்கனவே நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகியோர் தெலுங்கில் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் சம்பளம் வாங்குகின்றனர். இந்நிலையிலேயே தமன்னாவும் தனது சம்பளத்தை அதிகரித்துள்ளாராம்.

தமன்னாவுக்கு ஒரு கோடி கொடுத்து நடிக்க வைப்பதைவிட வேறு நடிகைகளை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஆக தமன்னா தனது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X