2025 மே 19, திங்கட்கிழமை

கல்யாணம் நோ... குழந்தை போதும்...!

Menaka Mookandi   / 2013 ஜூலை 10 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருமணம் செய்து கொள்ளப் பிடிக்கவில்லை. ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக உள்ளது என்று நடிகை ஸ்ருதிஹாஸன் பேட்டி கொடுத்து அதிர வைத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாஸனின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாஸன் அண்மையில் திருமணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், 'எனது சுதந்திரத்தை எதற்காகவும் யாருக்காவும் இழக்க விரும்பவில்லை' என்று கூறியுள்ளார். 

அத்துடன், 'நல்ல, அன்பான ஆண் துணை கிடைப்பது கடினமாக உள்ளது. என்னை என் போக்கில் ஏற்கும் ஆண் கிடைப்பாரா என்பது சந்தேகம்தான். உறவு என்ற பெயரில் என் சுதந்திரத்தை யாரும் களவாடிவிடக் கூடாது. இதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை.

எனக்கு திருமணத்திலோ, கேர்ள் பிரண்ட் போன்ற உறவுகளிலோ நம்பிக்கையில்லை. ஆனால் குழந்தைகள் ரொம்பப் பிடிக்கும். குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக உள்ளது. ஏன் என்று காரணம் புரியவில்லை' என்று கூறியுள்ளார் ஸ்ருதி.


You May Also Like

  Comments - 0

  • Maayaandi Thursday, 11 July 2013 06:58 AM

    நூல போல சேலை, தாயை போல புள்ளைன்னு சொல்லுவாங்க... பாவம் அவ அம்மாவ சொல்லக்கூடாது, இது அப்பன போல புள்ளை...

    Reply : 0       0

    rasmy Thursday, 11 July 2013 08:56 AM

    இது உங்க குடும்ப மரபு...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X