2025 மே 19, திங்கட்கிழமை

சிம்புவை கல்யாணம் பண்ண மாட்டேன்: ஹன்சிகா

Menaka Mookandi   / 2013 ஜூலை 17 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


'சிம்புவை நான் காதலிக்கவில்லை. அவரைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வரும் செய்திகளிலும் உண்மையில்லை என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார்.

சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன் என இரு திரைப்படங்களில் ஹன்சிகா நடித்து வருகிறார். பெரும்பான்மையான நேரத்தை அவருடனே செலவிடுகிறார். இதனால் இருவருக்கும் நெருக்கமான நட்பு உருவாகி அது இப்போது காதலாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் ஹன்சிகாவை சிம்பு திருமணம் செய்வதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்று சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் தெரிவித்தார். இந்த விஷயம் ஹன்சிகா முன்னணி நடிகையாக உள்ள ஆந்திர சினிமா உலகிலும் பரவியது.

இதைத்தொடர்ந்து ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்காக வந்த ஹன்சிகாவிடம், ராஜேந்தரின் பேட்டியைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.

''சிலம்பரசனும், நானும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வெளியாகும் செய்திகள் எனக்கு வருத்தத்தைத் தருகின்றன. எங்கள் இருவருக்கும் இடையே காதல் இல்லை.

இரண்டு பேரும் நண்பர்களாகவே பழகி வருகிறோம். நானும், சிலம்பரசனும் இரண்டு படங்களில் சேர்ந்து நடிக்கிறோம். அவ்வளவுதான். எனக்கு ஜோடியாக நடித்த மற்ற கதாநாயகர்களுடன் எப்படி பழகுகிறேனோ, அப்படித்தான் சிலம்பரசனுடனும் பழகி வருகிறேன். என் திருமணம் பெற்றோர் விருப்பப்படிதான் நடக்கும். இப்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியாவே இல்லை,' என்றார்.



You May Also Like

  Comments - 0

  • Saurav Wednesday, 17 July 2013 05:56 PM

    ஆக சிம்புவுக்கு இன்னும் ஒன்னும் செட்டாகவில்ல போல... பாவம்யா அவன்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X