2025 மே 19, திங்கட்கிழமை

சூர்யாவுடன் நடிக்க அசினுக்கு எதிர்ப்பு

Menaka Mookandi   / 2013 ஜூலை 19 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


சூர்யாவும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் இணையும் மூன்றாவது திரைப்படம் துருவநட்சத்திரம். இத்திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனனே தயாரித்து இயக்கவும் செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன், பார்த்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

திரைப்படத்தின் டெக்னீஷியன்கள் முதல் இதர நடிகர் நடிகைகளை சுலபமாக தேர்வு செய்த கௌதம் வாசுதேவ் மேனன், நாயகியை தேர்வு செய்வதில் மட்டும் குழம்பிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். நாயகியாக முதலில் த்ரிஷாதான் ஓ.கே. ஆனார்.

ஆனால், த்ரிஷாவுக்கு வயதாகி விட்டதாகவும், பள்ளி மாணவி கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்பதால் த்ரிஷாவை கழட்டிவிட்டார். இதனையடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார் என்கிற செய்திகள் வெளியாயின. ஆனால், அமலாபாலும் ஏனோ செட்டாகவில்லை போல் இருக்கிறது.

பின்னர் த்ரிஷா, அமலாபாலை கழட்டி விட்டு தனது ஆஸ்தான நடிகை சமந்தாவை ஒப்பந்தம் செய்ததாக தவல்கள் வந்தன. ஆனால் அவரும் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை. இதனால் தற்போது சூர்யா ஜோடியாக அசின் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சென்னையில் ஒரு மழைக் காலம் திரைப்படத்தில் இருவரையும் ஜோடியாக நடிக்க வைக்க கவுதம் முடிவு செய்தார். ஆனால் அத்திரைப்படம் நின்று போனது. எனவே மீண்டும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் இருவரையும் ஜோடியாக்கியுள்ளார். அசின் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சூர்யா, கவுதம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் என்பதால் இதில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் இந்த திரைப்படத்தில் அசின் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இது குறித்து இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, 'இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடிகர், நடிகைகள் இலங்கை செல்ல திரையுலக சங்கங்கள் தடை விதித்தன. அதை மீறி அசின் இந்தி திரைப்படப் பிடிப்புக்காக இலங்கை சென்றார்.

எனவே அவரை தமிழ் திரைப்படங்களில் நடிக்க வைக்க கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதையும் மீறி கவுதம் மேனன் தனது திரைப்படத்தில் அசினை நடிக்க வைப்பது கண்டிக்கதக்கது.இதை அனுமதிக்க முடியாது தமிழர்கள் உணர்வுகளுக்கு எதிராக கவுதம் மேனன், செயல் படக்கூடாது அசினை நடிக்க வைத்தால் படப்பிடிப்பை நடத்தவிட மாட்டோம். போராட்டம் நடத்துவோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனால் அசினும் நடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. கௌதம் சார் அப்படியென்ன பொல்லாத கேரக்டர் இந்த படத்தில் நாயகிக்கு. கொஞ்சம் புரியும்படியா எங்களுக்கும் சொல்லுங்களேன்... கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானம் கதையாகிடக்கு.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X