2025 மே 19, திங்கட்கிழமை

சிம்புவுடன் காதல் பூ மலர்ந்தது எப்படி?

Kogilavani   / 2013 ஜூலை 31 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிம்பு- நயன்தாரா காதல் விவகாரத்துக்கு பின்பு சிம்புவை கண்டாலே நடிகைகளுக்கு பயம் என்ற ஒரு நிலைப்பாடு காணப்பட்டது. சிம்புவுடன் நடித்தால் காதல் செய்திகள் காற்றில் பறக்கும், அதனால் தங்களது மார்க்கெட் சரிந்துவிடும் என்று அஞ்சிய பல முன்னணி நடிகைகள் அவருடன்  இணைந்து நடிப்பதையே தவிர்த்து வந்தனர்.

'வாலு', 'வேட்டை மன்னன்' படங்களுக்கு சிம்புவுடன் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமானபோது கூட, நயன்தாராவுடன் அவர் காதல் கொண்டு பிரிந்த விடயத்தை சொல்லி, பல அபிமானிகள் ஹன்சிகாவை எச்சரித்தனராம்.

அதனால், சிம்புவுடன் நடிக்கத் துவங்கிய போது, அவரைக் கண்டு பயந்து, ஒதுங்கியே நின்றாராம் ஹன்சிகா.

ஆனால், போகப் போக சிம்புவின் நாகரிகமான நடவடிக்கையும், பேச்சும், ஹன்சிகாவை கவர்ந்ததாம். அதன்பின் தான், மெல்ல மெல்ல புன்முறுவல் பூக்க ஆரம்பித்துள்ளார். இப்படி ஏற்பட்ட நட்புதான், நாளடைவில் காதலாக மாறியதாம்.

இதை தன் நட்பு வட்டாரங்களிடம் சொல்லி சிலிர்க்கும் ஹன்சிகா, இத்தனை நாளும் மற்ற ஹீரோக்களை மாதிரி தான், சிம்புவும். அவர் ஒன்றும் ஸ்பெஷல் இல்லை என்று சொல்லி வந்தார்.

ஆனால், காதலை ஒப்புக் கொண்ட பின், 'சிம்பு எனக்கு எப்பவுமே' ஸ்பெஷல் தான் என்று, வெட்கத்துடன் சொல்கிறார் ஹன்சிகா.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X