2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பரத்துக்கு டும்...டும்...டும்...

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் பரத்துக்கு திருமணம் உறுதியாகியுள்ளது. டுபாயைச் சேர்ந்த பல் டாக்டர் ஜெஸ்லியை கரம் பிடிக்கிறார் பரத். பதிவுத் திருமணம் செய்யவுள்ளார் பரத். இவர்களது திருமண வரவேற்பு செப்டெம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பரத் - ஜெஸ்லி திருமணம் ஒரு காதல் திருமணமாகும். நண்பர்களாக பழகி பின்னர் திருமண வாழ்வில் சங்கமிக்க முடிவு செய்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெறவுள்ளதாம்.

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். பரத் இதுவரை 23 திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 555 திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பரத் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றிருந்தார்.

இந்நிலையில், பரத்திற்கும் டுபாயை சேர்ந்த ஜோஸ்வா - ஜெஸ்ஸி ஆகியோரின் மகளான டாக்டர் ஜெஸ்லியும் நண்பர்களாக அறிமுகமாகி திருமண பந்தத்தில் இணைகின்றனர்.

இதுகுறித்து பரத் கூறுகையில், 'நண்பர்களாக பழகினோம். சில நாட்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருவரும் பேசி முடிவெடுத்தோம். எனது பெற்றோர் ஸ்ரீனிவாசன் - பாக்யலஷ்மி மற்றும் ஜெஸ்லியின் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் முன்னிலையில் எளிய முறையில் பதிவு திருமணம் செய்யவுள்ளோம்.

செப்டம்பர் 14ஆம் திகதியன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. திரைப்படத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்ற கலைஞர்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடக நண்பர்கள் அனைவரின் வாழ்த்துக்களோடும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருமணம் முடிவான உடனே என்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஷங்கர் அவர்களை சந்தித்து திருமணம் பற்றி கூறினேன். அவரும் அவரது மனைவியும் மனதார வாழ்த்தினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் மற்றும் எனது மேனேஜர் பழனிகுமார் ஆகியோர் செய்து வருகிறார்கள்' என்று கூறினார் பரத்.





You May Also Like

  Comments - 0

  • ROOPA Wednesday, 28 August 2013 12:58 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X