2025 மே 19, திங்கட்கிழமை

சூர்யாவின் முதல் முயற்சி...

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


'கொஞ்சும் காலையில் கண்கள் திறந்ததுமே... வாசம் வரவேற்கும் புதிய சன்ரைஸ்...' இந்த பாடலைக் கேட்டதும் சன்ரைஸ் ஞாபகம் வருவதை விட சூர்யாவின் ஞாபகம் தான் வரும். சூர்யாவையும் ஜோதிகாவையும் ஜோடியாக அத்தனை சன்ரைஸ் விளம்பரத்தில் பார்த்திருக்கின்றனர் பொது மக்களும் ரசிகர்களும்.

பொதுவாக தமிழ்த் திரையுலக நடிகர்களில் முன்னணியில் இருப்பவர்களை ஏதாவது விளம்பரப் படத்தில் நடிக்கவைக்க விளம்பர கம்பெனிகள் போட்டி போடுவார்கள். ஆனால் சூர்யா விடயத்தில் அப்படி இல்லை.

தன்னைத் தேடி வந்தவர்களை ஏமாற்றாமல் பல விளம்பரங்களில் நடித்துக் கொடுத்திருக்கிறார் சூர்யா. இத்தகைய குணம் படைத்த சூர்யா இதுவரை திரைப்படங்களுக்குக் கூட செய்யாத ஒரு காரியத்தை சன்ரைஸ் விளம்பரத்திற்காக செய்திருக்கிறார்.

தமிழ்த் திரையுலக ஹீரோக்கள் பலரும் தங்கள் திரைப்படங்களில் சொந்தக் குரலிலேயே பாடி நடித்திருக்க, சூர்யா மட்டும் அந்த லிஸ்டில் இடம்பெறாமலே இருந்து வந்தார். ஆனால் இப்பொழுது முதல் முறையாக சன்ரைஸ் விளம்பரத்திற்காக சொந்தக்குரலில் ஒரு பாட்டு பாடியிருக்கிறார் சூர்யா.

ராஜீவ் மேனன் உருவாக்கிக்கொண்டிருக்கும் அந்த விளம்பரத்திற்காக முதலில் குறிப்பிட்ட சன்ரைஸின் தீம் சோங்கை தனது சொந்தக் குரலில் பாடிக்கொடுத்திருக்கிறார் சூர்யா.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X