2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விஜய்க்கு அரசியல் ஆசை இல்லையாம்!

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழகத்தில் பல்வேறு தடைகளை கடந்து 'தலைவா' திரைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இத்திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

இதற்கிடையில் ரசிகர் மன்றங்கள் சார்ப்லி விஜயின் பிரமாண்டமான கட்டவுட்கள், பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில பேனர்களில் அரசியல் வாசகங்கள் பதியப்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள விஜய், தனது ரசிகர்களுக்கு கண்டிப்புடன் வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
'அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. தயவு செய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்களை போட வேண்டாம். அதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட மன்றங்களை கலைக்கக்கூட தயங்கமாட்டேன்.

இனி ரசிகர் மன்ற விடயங்களில் நானே நேரடியாக ஈடுபடுவேன். ஏன் தந்தையோ, வேறு யாரோ மன்ற விடயங்களில் தலையிடமாட்டார்கள்' என்று விஜய் கூறியுள்ளார்.

இருப்பினும், விஜய் ட்விட்டரில் இல்லை. அவர் பெயரில் வந்த அறிக்கை யார் வெளியிட்டதென்றும் தெரியவில்லை என்று விஜயின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

விஜய் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அவற்றை நிர்வகித்து வருபவர் எஸ்.ஏ.சந்திரசேகரன்தான். அண்மையில் மீனப்பாக்கம் விமான நிலையம் எதிரில் ரசிகர் மன்ற மாநாடு நடத்தி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க செய்யப்பட்ட ஏற்பாடு, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

விஜய் பிறந்த நாள் விழாவைக் கூட வெளிப்படையாகக் கொண்டாடவில்லை. அதைத் தொடர்ந்து வந்த தலைவா படப் பிரச்சினையில் விஜய் கெஞ்சும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். திரையுலகமும் அவருக்குக் கைக் கொடுக்கவில்லை. ஒரு வழியாக திரைப்படம் வெளியான பிறகு, 'நான் அரசியலில் ஈடுபடமாட்டேன்' என்ற விஜய் அறிக்கை வெளியானது.

இதுகுறித்து நேற்று விஜயின் மக்கள் தொடர்பாளர் மற்றும் முகாமையாளர்  பி.டி.செல்வகுமாரிடம் கேட்டபோது, எனக்குத் தெரியாதே என்று கூறிவிட்டார். இன்று மீண்டும் தொடர்பு கொண்டபோது, 'விஜய் ட்விட்டரில் இல்லை. நானும் எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை. விஜய் பெயரில் இந்தச் செய்தி எப்படி வெளியானதென்று தெரியவில்லை. யாரும் இதை நம்ப வேண்டாம்' என்றார்.



You May Also Like

  Comments - 0

  • lakshman Wednesday, 04 September 2013 03:02 PM

    இவர்கள் அரசியலுக்கு வரலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X