2025 மே 19, திங்கட்கிழமை

நானே... நானா...!

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவின் பொலிவூட் ரசிகர்கள் அவரைப் போன்றே மெழுகுச் சிலையொன்றை உருவாக்கியுள்ளனர். நயன்தாராவை பிரிந்த பிறகு பிரபுதேவா பொலிவூட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பொலிவூட்டில் அவரை ரீமேக் மன்னன் என்று புகழாரம் செய்து தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில் பிரபுதேவாவுக்கு அவரது பொலிவூட் ரசிகர்கள் மெழுகுச் சிலையை செய்துள்ளனர். மும்பை – பூனே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லோனாவாலா மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் பிரபுதேவாவின் மெழுகுச் சிலை திறப்பு விழா நடந்தது.

சிலையை திறந்து வைத்து அதன் அருகில் நின்று பார்த்து அதிசயித்தார் பிரபுதேவா. தன்னை பெருமைப்படுத்திய பொலிவூட் ரசிகர்களுக்கு தன் மனதில் ஸ்பெஷல் இடத்தை கொடுத்துள்ளாராம் பிரபுதேவா.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X