2025 மே 19, திங்கட்கிழமை

தீபாவளிக்கு ஆரம்பம்; பொங்கலுக்கு வீரம்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 04 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் அஜீத் குமார் நடித்த 'ஆரம்பம்' திரைப்படம், எதிர்வரும் தீபாவளிக்கும், 'வீரம்' விரைப்படம் பொங்கலுக்கும் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
 
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 'ஆரம்பம்' தலைப்பு அறிவிக்கப்பட்ட நாள் முதல் இத்திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஒரு புறம் அதிகரிக்க அதிகரிக்க, திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை பற்றிய செய்திகள் பல யூகங்களாக வெளிவந்தது.

இன்று திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இதைப் பற்றி வெளியிட்ட பத்திரிக்கைக் குறிப்பில், 'ஆரம்பம்' அஜீத் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக இருக்கும், படபிடிப்பு முடிந்து விட்டாலும் படத்தை மெருகேற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, மிக பெரிய அளவில் பேசப்படும். ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டை குறித்த தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்' என்றார்.

பொங்கலுக்கு வீரம், சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வீரம் திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக அஜீத்தின் பி.ஆர்.ஓ அறிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X