2025 மே 19, திங்கட்கிழமை

மிஸ்ஸானதால் கவலையடைந்த அஜித்...

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


அஜீத் குமாரும் சரி, விஜய்யும் சரி பல வெற்றிப் படங்களை மிஸ் பண்ணியுள்ளனர். அவர்களுக்கு வந்த வாய்ப்பை சில காரணங்களால் அவர்கள் ஏற்க முடியாமல் போக அதில் வேறு நடிகர்கள் நடித்து சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

தனக்கு கிடைத்த வாய்ப்புக்களைத் தவறவிட்டதால் கவலையடைந்துள்ளாராம் அஜித்குமார். இருப்பினும், அந்த வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தி தங்களது திறமையை சிறப்பாக வெளிக்காட்டிய நடிகர்களுக்கு அவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளாராம்.

இவ்வாறு அஜீத் குமார் மிஸ் பண்ணிய படங்களை பார்ப்போம்.கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா, பியா பாஜ்பாய் நடித்த வெற்றித் திரைப்படம் கோ. இந்த திரைப்படத்தின் கதை அஜீத்தை மனதில் வைத்து எழுதப்பட்டதாம். ஆனால் அஜீத் நடிக்க முடியாமல் போக அது சூர்யா, சிம்பு என்று போய் இறுதியில் ஜீவா நடித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா நடித்த கஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் அஜீத் நழுவவிட்டுள்ளார். அதேவேளை, கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடித்த சூப்பர் ஹிட் படம் காக்க காக்க. இந்த படத்தில் நடிக்க முதலில் அஜீத்தை தான் கௌதம் அணுகினாராம்.

சீயான் விக்ரம் நடித்த வெற்றிப் படம் ஜெமினி. அதில் வந்த ஓப் போடு வசனம் அனைவரையும் கவர்ந்தது. இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் நழுவ விட்டுள்ளார் அஜீத். பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த நான் கடவுள் படத்தில் அஜீத் நடித்திருக்க வேண்டியது.



You May Also Like

  Comments - 0

  • saravana Friday, 14 February 2014 07:11 AM

    “தல”யால வாழ்பவர்கள் தான் அதிகம். அடுதவங்கள வாழ வச்சிதான் “தல” வாழ்வார்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X