2025 மே 19, திங்கட்கிழமை

ஆர்யாவுக்காக கொள்கை மாறிய நயன்...

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொதுவாக விளம்பர படங்களில் நடிப்பதில்லை, டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்ற கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஆனால், தற்போது அவரும், நடிகர் ஆர்யாவும் இணைந்து நடித்த 'ராஜா ராணி' திரைப்படம் சம்பந்தமான விளம்பரங்களில் தலை காட்டுகிறாம் நயன்.

நடிகையின் இந்தத் திடீர் மன மாற்றத்தின் பிண்ணனியில் நடிகர் ஆர்யா தான் உள்ளார் என்று பேச்சு எழுந்துள்ளது. நண்பரின் வேண்டுகோளுக்கிணங்கவே, நயன்தாரா தற்போது அவருடைய திரைப்படம், விளம்பரம் சம்பந்தப்பட்ட டி.வி. நிகழ்ச்சியில் வருகிறாராம்.

இதேவேளை, நயன்தாரா நடித்த 'ராஜா ராணி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில், அந்த திரைப்படத்தை இயக்கிய அட்லியை வைத்து மீண்டும் படம் தயாரிக்கிறார் இயக்குநர் ஏஆர்.முருகதாஸ். ராஜா ராணி குறித்து பாஸிடிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

கிராமம் சார்ந்த திரையரங்குகளில் பெரிய வரவேற்பில்லாவிட்டாலும், மல்டிப்ளெக்ஸ் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இந்தப் படம் பரவாயில்லை எனும் அளவுக்குப் போகிறது. திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் அட்லிக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இப்படத்தை தி நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து இருந்தார். இந்நிலையில், இந்நிறுவனத்துடன் இணைந்து அட்லி மீண்டும் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இப்படத்திற்கும் ஜீ.வி.பிரகாஷே இசையமைக்கிறார், ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர், நடிகைகள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் சத்யராஜ் மட்டும் நிச்சயம் இருப்பார் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் அட்லி.



You May Also Like

  Comments - 0

  • ramesh Tuesday, 01 October 2013 09:53 AM

    ராஜா ராணி படம் செம சூப்பர்.........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X