2025 மே 19, திங்கட்கிழமை

விருது பெற தயங்கும் கமல்...

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


வாழ்நாள் சாதனையாளர் விருது வயதான மூத்த நடிகர்களுக்குத்தான் இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இந்த முறை உலக நாயகன் கமல் ஹாசன் இந்திய சினிமாவுக்கு செய்த சாதனைகளுக்காக இந்த விருதினை அவருக்குத் தர முடிவு செய்து அறிவித்துள்ளனர் விழாக் குழுவினர்.

மும்பையில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. ஆனால் இந்த விருதை ஏற்கலாமா, வேண்டாமா என்ற யோசனையில் உள்ளாராம் கமல்.

இது குறித்து அவர் கூறுகையில், 'இந்த விருதை பெற எனக்கு தகுதி இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனாலும் விருதுக்கு என்னை பரிந்துரை செய்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

இது எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதோடு, இன்னும் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி விடுவதாகவும் இருக்கும். அதே நேரம் வயதான நடிகர்களுக்கு கொடுக்கும் இந்த விருதை வயது குறைந்த இந்தக் கமலஹாசனுக்கு கொடுக்கலாமா என்று பேசுபவர்களுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள், இந்த விருதை வேண்டாம் என்று மறுக்கவும் வேறு வயதான நடிகர்களுக்கு கொடுங்கள் என சிபாரிசு செய்யவும் நான் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X