2025 மே 19, திங்கட்கிழமை

என் கதை: ரஜினி நெகிழ்ச்சி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


'வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழும் என்பதற்கு என் கதைதான் உதாரணம்' என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். என்.டி.டி.வி தொலைக்காட்சி நிறுவனத்தின் 25ஆவது வெள்ளி விழா ஆண்டையொட்டி நடத்தப்பட்ட இணையத்தள கருத்துக் கணிப்பில் இந்தியாவின் கிரேட்டஸ்ட் இந்தியராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்தைப் போல மொத்தம் 25பேர் தேரிவு செய்யப்பட்டனர். அதில் முதலிடம் ரஜினிக்குத்தான். விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடந்தது. அதில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருதினை வழங்கினார்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'வாழ்க்கையில் சில நேரங்களில் அதிசயம் நிகழும். அப்படி நிகழ்கிறது என்பதற்கு எனது வாழ்க்கைதான் உதாரணம். ஒரு சாதாரண பஸ் கண்டக்டர் இங்கு மாபெரும் மனிதர்களோடு சமமாக நின்று விருது வாங்குகிறார். இது உண்மையிலேயே அதிசயம்.

இந்த விருதை எனக்கு தாயாகவும், தந்தையாகவும் திகழும் என் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட்டுக்கும், என் குருநாதர் கே.பாலசந்தருக்கும், என் தமிழ் மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். இவர்களின் அன்பும், பாசமும் இல்லை என்றால், நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்' என்றார் ரஜினிகாந்த்.

You May Also Like

  Comments - 0

  • sumithy Monday, 16 December 2013 08:48 AM

    Its true

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X