2025 மே 19, திங்கட்கிழமை

செக்ஸில் பார்ட்னரை தெரிவது அவரவர் விருப்பம்: த்ரிஷா

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஓரினச் சேர்க்கை அல்லது செக்ஸ் வைத்துக் கொள்ள பார்ட்னரைத் தெரிவு செய்வது அவரவர் விருப்பம் என்று நடிகை த்ரிஷா கருத்து தெரிவித்துள்ளார்.

ஓரினச் சேர்க்க கிரிமினல் குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. அரசியல் தலைவர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லி பரபரப்பு கிளப்பி வருகிறார்கள்.

திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா? அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு ஓரினச் சேர்க்கை பற்றி பேசி வருகிறார்கள். குறிப்பாக, ஆதரவாகப் பேசி வருகிறார்கள்.

இப்போது நடிகை த்ரிஷாவும் கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 'இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் யாருடனும் நட்பு வைத்துக் கொள்ளலாம். பேசிப்பழகலாம். 'செக்ஸ்', அவரவர் விருப்பம்.

இவரோடுதான் 'செக்ஸ்' வைத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. 'செக்ஸ்' விடயத்தில், பார்ட்னரை தேர்ந்தெடுப்பது அவரவர் இஷ்டம். இவர்தான் 'பார்ட்னர்' என்று மற்றவர்கள் பலவந்தப்படுத்த கூடாது!' என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சினிமா நட்சத்திரங்கள் விளையாடும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் சென்னை அணி தூதராக த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட, போஜ்புரி மொழி நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.

தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணி கேப்டனாக விஷால் உள்ளார். இந்த அணிக்கு விளம்பர தூதுவராக பணியாற்ற நடிகை தேர்வு நடந்தது. தமன்னா உள்ளிட்ட பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் த்ரிஷா தெரிவாகியுள்ளார்.

இதற்காக அவருக்கு கணிசமான தொகை சம்பளமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அணிக்கு விளம்பர தூதுவராக தேர்வானது குறித்து திரிஷா கூறுகையில், 'சென்னை ரைனோஸ் அணிக்கு தூதுவராகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பல வருடங்களாக இந்த பொறுப்புக்கு நான் பரிசீலிக்கப்பட்டேன். பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை.

முதல் தடவையாக எனக்கு பிடித்த சென்னை அணிக்கு விளம்பர தூதுராகி உள்ளேன். நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்' என்றார். அண்மையில்தான் சென்னை நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு நான் தூதராக இல்லை. ஏனோ என்னை தேர்வு செய்யவில்லை என்று ஏக்கத்துடன் அறிக்கை விட்டிருந்தார் த்ரிஷா. இப்போது அவர் ஏக்கம் நிறைவேறியுள்ளது.




You May Also Like

  Comments - 0

  • tirupthi Saturday, 21 December 2013 05:02 AM

    கருத்துக்களை வெளியிடும் போது தமது கலாசாரங்களை மறந்துவிடக்கூடாது

    Reply : 0       0

    shan Thursday, 26 December 2013 10:38 PM

    நடிகைகளுக்கு கலாசாரமாவது கத்தரிக்காயாவது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X